Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யானை படத்தின் அடுத்தகட்ட பணியை ஆரம்பித்த அருண்விஜய்!

யானை படத்தின் அடுத்தகட்ட பணியை ஆரம்பித்த அருண்விஜய்!
, செவ்வாய், 7 டிசம்பர் 2021 (20:34 IST)
அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் யானை என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட பணியான டப்பிங் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்த ராதிகா டப்பிங் பணியை முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இந்த படத்தின் ஹீரோ அருண் விஜய் தனது டப்பிங் பணியை ஆரம்பித்துள்ளார். இன்றும் நாளையும் அவர் டப்பிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் யானை திரைப்படம் அடுத்த மாதம் ரிலீசாகும் என்று படக்குழுவினர் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அட்டகாசமான உடை அணிந்து அந்த இடத்தில் போக்கஸ் வைத்த ஜான்வி கபூர்!