உடற்பயிற்சி செய்யும் போது கீழே விழுந்த நடிகர் அருண்விஜய்... வைரலாகும் வீடியோ

Webdunia
சனி, 16 மே 2020 (16:25 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அருண் விஜய் தனது உடலை பிட்டாக வைத்துக் கொள்வதில் எப்போதும் முழு ஈடுபாடுடன் இருப்பார்.

இந்நிலையில் கொரொனா காலத்தில் பிரபல நட்சத்திரங்கள் தங்கள் ரசிகர்களுக்கான வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அருண் விஜய் தனது வீட்டில் உடற்பயிற்சி செய்யும்போது கீழே வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அருண்விஜய் கொரோனா காலத்துக்கு முன்  தொடங்கப்பட்ட பாக்ஸர் என்ற படத்துக்காக தீவிரமாக வீட்டில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார்.

அப்போது அவர் அப்டவுன் பயிற்சிக்காக ஒரு கம்பத்தில் தலைகீழாக தொங்கி, கையில் ஒரு பந்தை வைத்துக் கொண்டிருக்கும் சில நிமிடங்களில் அவர் கீழே விழுந்தார்.

நல்ல வேளையாக அவருக்கு அடிபடவில்லை. இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, ''பயிற்சியாளர் இல்லாமல் உடற்பயிற்சி செய்யாதீர்கள்.என்னை அடிபடாமல் பாதுக்காத்த கடவுளுக்கு நன்றி, இதுபோல் மேற்பார்வை இல்லாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டாம் ''எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை காஜல் அகர்வால் மருத்துவமனையில் அனுமதியா? என்ன நடந்தது?

கார் ரேஸ் சீசன் முடிந்தது! மீண்டும் சினிமாவுக்கு திரும்பும் AK! - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் ‘eye candy’ புகைப்படங்கள்… அசத்தல் ஆல்பம்!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் இழுக்கும் எஸ்தர் அனிலின் புகைப்படங்கள்!

ட்யூட் படத்தின் மூலம் 35 கோடி ரூபாய் லாபம்… ரிலீஸுக்கு முன்பே அறிவித்த தயாரிப்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments