Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பி பி இ உடையுடன் மனைவிக்கு இறுதி சடங்குகளை செய்த அருண் ராஜா காமராஜ்!

பி பி இ உடையுடன் மனைவிக்கு இறுதி சடங்குகளை செய்த அருண் ராஜா காமராஜ்!
, திங்கள், 17 மே 2021 (16:18 IST)
இயக்குனர் அருண் ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

பிரபல இயக்குநர் மற்றும் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளது திரையுலகினர்களை அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. சிவகார்த்திகேயன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கனா என்ற திரைப்படத்தை இயக்கிவரும் கபாலி. தர்பார் பைரவா உள்பட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியவருமான அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி கொரோனா தொற்றுக்கு உள்ளாகி கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் .

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு திடீரென அவர் காலமானார். இதனை அடுத்து திரையுலகினர் அருண் ராஜா காமராஜ் அவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அருண் ராஜா காமராஜுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் சிகிச்சையில் இருந்துள்ளார். அதனால் மனைவியின் இறுதி சடங்குகளில் அவர் பிபிஇ கவச உடைகளுடன் வந்து கலந்துகொண்டார். அவரின் கையறு நிலை காண்போரைக் கண்கலங்க செய்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்ணன் படத்தில் நான் ஏன் அதை செய்யவில்லை… நடிகர் லால் விளக்கம்!