Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருண் விஜய் நடிக்கும் முதல் ஓடிடி சீரிஸ்… ‘தமிழ் ராக்கர்ஸ்’ முதல் லுக் வெளியீடு

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (09:17 IST)
நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்ற புதிய வெப் தொடர் உருவாகியுள்ளது.

75 ஆண்டுகளுக்குமேலாக தரமான கதையம்சம் உள்ள படங்கள் மூலம் , திரையுலகில் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த, ஏவிஎம் புரொடகஷ்ன்ஸ் நிறுவனம் சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் திரைப்பட தயாரிப்பில் இறங்கியுள்ளது. புதிய, புதிரான, திரில்லர் கதைக்களம் கொண்ட "தமிழ் ராக்கர்ஸ்" என்ற தொடரை இயக்குனர் அறிவழகன் இயக்கியுள்ளார். தமிழ் திரைப்பட உலகில் சமீப காலமாக நடக்கும் திரைப்பட திருட்டு கும்பலை மையமாகக் கொண்டு அதன் யதார்த்தங்களை சுவைபடச் சொல்லும் "தமிழ் ராக்கர்ஸ்" என்ற தொடரின் மூலம் தன் OTT பயணத்தை சோனி லிவ்-ல் தொடங்குகிறது.

இந்த தொடரில் தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகனான அருண் விஜய் நடித்துள்ளார். சமீபத்தில் அவரின் யானை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது தமிழ் ராக்கர்ஸ் முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. விரைவில் சோனி லிவ் தளத்தில் இந்த சீரிஸ் ஸ்ட்ரீம் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SonyLIV (@sonylivindia)

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments