Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓவர் பட்ஜெட்டால் பிஸ்னஸ் செய்ய முடியாமல் தடுமாறும் அருண் விஜய்யின் படம்!

Webdunia
புதன், 9 ஆகஸ்ட் 2023 (11:24 IST)
பல வருடங்களாக போராடி வந்த அருண் விஜய்க்கு தடையற தாக்க மற்றும் தடம் போன்ற படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்து இப்போது முன்னணி நடிகராகியுள்ளார்.இதையடுத்து அவர் இப்போது இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் ஒரு புதுப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் இங்கிலாந்தில் பெரும்பகுதி நடந்தது. அருண் விஜய், ஏமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் நடிக்கும் இந்த படத்துக்கு ‘அச்சம் என்பது இல்லையே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படத்தை லைகா வாங்கி வெளியிடுவதாக அறிவித்தது. ஆனால் அறிவிப்பு வெளியாகி சில மாதங்கள் ஆகியும் இன்னும் அடுத்த கட்ட வேலைகள் தொடங்கவில்லை. இதற்குக் காரணம் இந்த படத்தின் அதிக பட்ஜெட்தான் என்று சொல்லப்படுகிறது.

சுமார் 30 கோடி ரூபாய் செலவில் இந்த படம் உருவாகியுள்ளதால், அந்த அளவுக்கு பிஸ்னஸ் செய்யமுடியாமல் படக்குழு தடுமாறி வருவதாகவும், அதனால் ரிலீஸ் திட்டமிட்டபடி நடக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முடிந்தது முத்தழகு தொடர்! கடைசி நாள் படப்பிடிப்பு விடியோவை பகிர்ந்த நடிகை!

'தளபதி 69’ படத்தில் இணைந்த இன்னொரு ஹீரோ.. சூப்பர் அறிவிப்பு..!

போக்சோ சட்டத்தில் கைதான ஜானி மாஸ்டருக்கு ஜாமீன்.. தேசிய விருது காரணமா?

’வேட்டையன்’ படத்துடன் ரிலீஸ் ஆகிறதா ‘விடாமுயற்சி’ டீசர்? ரஜினி, அஜித் ரசிகர்கள் குஷி..!

’தளபதி 69’ படத்தில் இணைந்த 3வது நாயகி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments