Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷ்ணு விஷால் & அருண் ராஜா காமராஜ் இயக்கும் படத்தைத் தயாரிக்கும் பிரபல நிறுவனம்!

vinoth
புதன், 19 மார்ச் 2025 (11:02 IST)
கனா மற்றும் நெஞ்சுக்கு நீதி ஆகிய படங்களை இயக்கிய அருண் ராஜா காமராஜாவின் சமீபத்தைய வெப் சீரிஸான லேபிள் நல்ல வரவேற்பைப் பெற்றது.நடிகர் சிவகார்த்திகேயனின் கல்லூரி கால நண்பரான அருண் ராஜா காமராஜா சிவகார்த்திகேயன் தயாரித்த கனா படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.

மேலும் நடிகராகவும் சிவகார்த்திகேயன் பல படங்களில் அவரை நடிக்க வைத்துள்ளார். கனா படத்துக்கு பிறகு வெற்றி அவர் கார்த்தி மற்றும் ரஜினி ஆகியோருக்குக் கதை சொல்லி இருந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த படங்கள் அடுத்த கட்டத்துக்கு செல்லவில்லை.

அதன் பிறகு அவர் நயன்தாரா நடிப்பில் ஒரு படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அந்த படம் கைவிடப்பட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இப்போது அவர் விஷ்ணு விஷால் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த படத்தை முதலில் விஷ்ணு விஷாலே தயாரிக்க இருந்த நிலையில் தற்போது வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.6000 கோடி சினிமாவில் முதலீடு செய்யும் நிறுவனம்.. பெரும்பாலும் பக்தி படங்கள் தான்..!

சிம்பு - வெற்றிமாறன் படத்தில் ‘வடசென்னை’ படத்தின் 3 கேரக்டர்கள்.. தனுஷ் அதிர்ச்சி..!

லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் சூரி தான் ஹீரோ.. ஆச்சரிய தகவல்..!

பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்கலாமா? சோனாக்‌ஷி சின்ஹா அளித்த பதில்..!

போதைப்பொருளுக்கு Code Word..? மேலும் சிக்கும் முக்கியப் புள்ளிகள்! - நடிகர் கிருஷ்ணா கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments