தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படத்தின் டீசர் நேற்று நள்ளிரவு வெளியாகி உலகம் முழுவதிலும் உள்ள அஜித் ரசிகர்களால் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசரை ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் பிரமுகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
கோலிவுட்டில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து பிரமுகர்களும் இந்த டீசர் குறித்து தங்கள் கருத்தை டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் 'நெருப்புடா' புகழ் அருண்காமராஜ் இதுகுறித்து கூறியபோது, 'ஒரு எழுச்சியூட்டும் டீசர், எழுச்சியூட்டும் டீமிடம் இருந்தும் எழுச்சியூட்டும் தல என்ற மனிதனிடம் இருந்தும் கிடைத்துள்ளது. நான் ஒரு விஜய் ரசிகன் தான். ஆனால் உண்மையை சொன்னால் 'விவேகம்' டீசர் சூப்பர்' என்று அவர் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.
அருண்காமராஜின் இந்த பதிவுக்கு அஜித் ரசிகர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் கிடைத்து வரும் நிலையில், விஜய் ரசிகர்களிடம் இருந்து கிண்டலும் கேலியுமான விமர்சனமும் எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது