அருள்நிதி நடித்து தயாராகியுள்ள டி ப்ளாக் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் டிமாண்டி காலணி, ஆறாது சினம் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் அருள்நிதி. தொடர்ந்து வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் அருள்நிதி தற்போது டி ப்ளாக் என்ற படத்தில் நடித்துள்ளார்.
விஜய்குமார் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் அவந்திகா, கரு பழனியப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரான் எதன் யோகன் இசையமைத்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.