Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருள்நிதியின் 'கழுவேத்தி மூர்க்கன்' பட டிரைலர் ரிலீஸ்

Webdunia
வெள்ளி, 19 மே 2023 (21:32 IST)
அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன் பட டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் அருள்நிதி. இவர், வம்சம், மெளனகுரு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் திருவின் குரல். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், அருள்நிதி தற்போது நடித்து வரும் படம் கழுவேத்தி மூர்க்கன். இப்படத்தை ராட்சசி படத்தை இயக்கிய சை கவுதமராஜன் இயக்கியுள்ளார்.

இப்படத்தில், ஹீரோயினாக துஷாரா நடிக்கிறார். சாயாதேவி, பிரதாப் சாயா, முனிஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் தயாரிக்கும் நிலையில், டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர்  கடந்த ஏப்ரல் மாதம்   வெளியான நிலையில், இன்று இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களைக் கவர்ந்துள்ள நிலையில், இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

முந்தைய படங்களைவிட இப்படத்தில்  அருள் நிதியின் ஆக்சன் காட்சிகள் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.  மேலும், இப்படம் வரும் மே 26  ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கில்லர் படத்துக்கு இசையமைப்பாளர் யார்?... எதிர்பார்ப்பை எகிற வைத்த SJ சூர்யா!

ஹோம்லி லுக்கில் க்யூட்டான போஸ்களில் மிளிரும் யாஷிகா!

அழகுப் பதுமை… மழலை சிரிப்பு… ஆண்ட்ரியாவின் ‘வாவ்’ புகைப்படங்கள்!

பிரேமலு 2 கைவிடப்பட்டதா?... வேறு படத்தில் கவனம் செலுத்தும் இயக்குனர்!

சமையல் ஷோவுக்கு எதற்குக் கவர்ச்சி?...எனக்கு வேற வழி தெரியல –ஸ்ரீரெட்டி ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments