இசை படைப்புகளுக்கு ஜி.எஸ்.டி? ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 6.79 கோடி அபராதம்! – ஜிஎஸ்டி ஆணையர் விளக்கம்!

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (11:01 IST)
பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசைக்கான காப்புரிமையை தயாரிப்பாளர்களுக்கு வழங்காததாக அவருக்கு ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திரைத்துறை விதிகளின்படி ஒரு இசையமைப்பாளர் தனது இசைக்கான காப்புரிமையை சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு முழுமையாக வழங்கும் பட்சத்தில் அவருக்கு ஜிஎஸ்டி வரி பிடித்தத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுவது நடைமுறையில் இருந்து வருகிறது.

ஆனால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது காப்புரிமையை முழுமையாக தயாரிப்பாளர்களுக்கு வழங்கவில்லை என அவர் ரூ.6.79 கோடி சேவை வரி செலுத்த வேண்டும் என ஜி.எஸ்.டி ஆணையர் 2019ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பினார்.

ALSO READ: ஆளவந்தான் மட்டுமில்லை விஜய்யின் படத்தையும் ரீ ரிலீஸ் செய்யவுள்ள கலைப்புலி தாணு!

இசை படைப்புகளின் காப்புரிமையை தயாரிப்பாளர்களிடம் அளித்துவிட்ட பிறகும் தன்னிடம் வரி வசூலிப்பது நியாயமில்லை என்று ஏ.ஆர்.ரஹ்மான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சேவை வரியை செலுத்தாதற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அபராதமாக அதே ரூ.6.79 கோடி விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் விளக்கம் அளித்த ஜிஎஸ்டி ஆணையர், ஏ.ஆர்.ரஹ்மானின் புகழை களங்கப்படுத்துவதற்காக நோட்டீஸ் அனுப்பப்படவில்லை. ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவு சேகரித்த  தகவல்களின்படியே அவருக்கு அபராதம் விதிக்கபட்டது என கூறியுள்ளார்.

இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அவர் என் எல்லாமும்: இந்த வெற்றிடம் வாழ்நாள் முழுவதும் இருக்கும்: கணவர் தர்மேந்திரா குறித்து ஹேமாமாலினி!

ஜனநாயகன் இசை வெளியீட்டு நிகழ்ச்சியா… இல்லை கான்செர்ட்டா?.. குழம்பும் ரசிகர்கள்!

அந்த வார்த்தையை எல்லாம் படத்தில் வைக்க முடியாது… சென்ராயனுக்கு கீர்த்தி சுரேஷ் பதில்!

நான் என்ன செஞ்சேன்?.. என்னை மோசமானவன் போல காட்டிவிட்டீர்களே! கங்கை அமரன் ஆதங்கம்!

அஞ்சான் தோல்விக்குப் பொறாமையும் ஒரு காரணம்… wanted ஆக வண்டியில் ஏறும் இயக்குனர் லிங்குசாமி !

அடுத்த கட்டுரையில்
Show comments