Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளவந்தான் மட்டுமில்லை விஜய்யின் படத்தையும் ரீ ரிலீஸ் செய்யவுள்ள கலைப்புலி தாணு!

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (09:22 IST)
தயாரிப்பாளர் தாணு தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் என்ற திரைப்படம் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன், ரவீனா டண்டன், மனிஷா கொய்ராலா நடித்த 'ஆளவந்தான்' திரைப்படம் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியாகியது. இந்த படத்தின் பட்ஜெட் அந்த காலத்திலேயே ரூ.20 கோடி. இது இன்றைய மதிப்பில் ரூ.400 கோடி என்பது குறிப்பிடத்தக்க்கது. இந்த படம் வசூல் ரீதியாக படுதோல்வி அடைந்தது. இதனால் கமலுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. பல இடங்களில் தாணு கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்தார். ஆனால் ஒரு கட்டத்துக்குப் பிறகு இந்த படத்துக்கான பார்வையாளர்கள் உருவாகினர்.

இந்நிலையில் இப்போது 'ஆளவந்தான்' படத்தை டிஜிட்டலாக்கி மீண்டும் திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் கடந்த சில ஆண்டுகளாகவே சொல்லப்பட்டு வந்தாலும், இப்போது விக்ரம் வெற்றியை அடுத்து இந்த வேலைகள் சூடுபிடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுபற்றி சமீபத்தில் பேசிய கலைப்புலி தாணு “ஆளவந்தான் மட்டுமில்லை விஜய்யின் சச்சின் படத்தையும் ரி ரிலீஸ் செய்யப்போகிறேன்” எனக் கூறியுள்ளார். சச்சின் படமும் திரையரங்கில் ரிலீஸான போது பெரிய வரவேற்பைப் பெறவில்லை. ஆனால் அதன் பின்னர் தொலைக்காட்சி இணையம் ஆகியவற்றில் அந்த படத்துக்கான ரசிகர்கள் உருவாகினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

இரண்டாம் வாரத்தில் படுத்த கவினின் ஸ்டார் பட வசூல்!

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments