Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெற்றோர் விவாகரத்து குறித்து ARR அமீன் வேண்டுகோள்!

vinoth
புதன், 20 நவம்பர் 2024 (09:02 IST)
தமிழ் சினிமாவின் முக்கிய அடையாளங்களில் ஒருவராக கருதப்படுபவர்  ஏ ஆஎ ரஹ்மான். உலகளவில் புகழ்பெற்ற இவர் 32 ஆண்டுகளாக இசையமைப்பாளராக கொண்டாடப்பட்டு வருகிறார். இவருக்கும் சாய்ரா பானுவுக்கும் இடையே 1995 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்றிரவு திடீரென சாய்ரா பானு ஏ ஆர் ரஹ்மானை விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்தார். அதில் “தங்களுக்குள் நிரப்ப முடியாத இடைவெளி விழுந்துவிட்டதாக” அவர் கூறியிருந்தார். அவரின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

இதுபற்றி ரஹ்மான் வெளியிட்டுள்ள பதிவில் “நாங்கள் முப்பதாவது ஆண்டு(முப்பதாவது கல்யாண நாள்) என்ற கனவை அடைய முயன்றோம், ஆனால் சில விஷயங்கள் எதிர்பாராதவிதமாக முடிகின்றன. கூடவே, உடைந்த இதயங்களின் சுமையால் கடவுளின் சிம்மாசனம் கூட நடுங்கலாம். உடைந்த இதயங்கள் மீண்டும் பொருந்தாமல் போனாலும், இந்த சிதைவில் நாங்கள் அர்த்தத்தைத் தேடுகிறோம்,. எங்கள் நண்பர்களுக்கு, உங்கள் கருணைக்கு நன்றி, மேலும் இந்த வலுவற்ற காலகட்டத்தை கடக்க எங்கள் தனிமையைக் காத்துக்கொள்ள உதவவும்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் ரஹ்மானின் மகனும் பாடகருமான அமீன் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் “நாங்கள் இந்த நேரத்தில் எங்கள் தனியுரிமையை மதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். புரிதலுக்கு நன்றி” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments