Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் சேதுபதியை எட்டி உதைப்பவருக்கு 1001 ரூபாய் பரிசு… அர்ஜுன் சம்பத் சர்ச்சை டிவீட்!

Advertiesment
விஜய் சேதுபதியை எட்டி உதைப்பவருக்கு 1001 ரூபாய் பரிசு…  அர்ஜுன் சம்பத் சர்ச்சை டிவீட்!
, திங்கள், 8 நவம்பர் 2021 (14:45 IST)
விஜய் சேதுபதியை பெங்களூர் விமான நிலையத்தில் ஒரு நபர் எட்டி உதைத்த வீடியோ இணையத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி. இவர் விமான நிலையத்திற்கு சென்றபோது, அங்கு நடிகர் விஜய்சேதுபதியை ஒரு நபர் வந்து உதைத்ததாகக் கூறப்பட்டது. இது அங்குள்ளவர்களால் வீடியோவகப் பதிவு செய்யப்பட்டதால் உடனே இணையதளத்தில் வைரல் ஆனது. இதனால் விஜய்சேதுபதி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் சேதுபதியை தாக்கியவர் அளித்த நேர்காணல் ஒன்றில் இந்தியாவுக்கு எதிராக பேசியதாகவும், பசும்பொன் முத்துராமலிங்கத்தை எதிர்த்து பேசியதாலும் அவரை தாக்கியதாகக் கூறியுள்ளார். இந்நிலையில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் ‘தேவர் அய்யாவை இழிவுபடுத்தியதற்காக நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரொக்கப்பரிசு ரூ.1,001 வழங்கப்படும் என அர்ஜூன் சம்பத் அறிவித்துள்ளார். விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்கும் வரை அவரை உதைப்பவருக்கு ஒரு உதைக்கு 1001 வழங்கப்படும்’ என சர்ச்சைக்குரிய டிவீட்டைப் பகிர்ந்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று மாலை ஜிவி பிரகாஷின் ‘ஜெயில்’ பாடல் ரிலீஸ்!