லாஸ்லியாவின் முதல் படத்தில் இணைந்த ஆக்சன் கிங்

Webdunia
திங்கள், 17 பிப்ரவரி 2020 (18:20 IST)
பிரபல இந்திய கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரருமான ஹர்பஜன்சிங் முதன்முதலாக தமிழில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பதும் அந்தப் படத்தின் டைட்டில் பிரண்ட்ஷிப் என்றும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
மேலும் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
லாஸ்லியாவின் முதல் படத்தில் இணைந்த ஆக்சன் கிங்
இதனை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு எகிற வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்சன் கிங் அர்ஜுன் இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்கிறாரா? அல்லது முக்கிய கேரக்டரில் நடிக்கின்றாரா?  என்பது குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இயக்குனர்கள் ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கும் இந்தப் படத்தை ஜேபிஆர்பி ஸ்டாலின் என்பவர் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments