Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்த அர்ஜூன்...எகிறும் எதிர்பார்ப்பு

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2023 (16:02 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் தலைவர் 171 படத்தில் அர்ஜூன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

நெல்சன்  இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில்  வெளியான படம் ஜெயிலர். இப்படம் வசூல் சாதனை படைத்துள்ள நிலையில், இப்படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த.செ.ஞானவேல் இயக்கும் அடுத்த படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங்குக்காக படக்குழுவினர் ரஜினியோடு திருவனந்தபுரத்துக்கு சமீபத்தில் சென்ற    நிலையில் அங்கு  பூஜையுடன் சில காட்சிகள் படமாக்கப்பட்டன.

இதையடுத்து, திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் தலைவர் 170 பட ஷூட்டிங்  நடைபெற்று வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த்தை ரசிகர்கள் நேரில் சந்தித்து செல்பி எடுத்து வரும்  நிலையில், ரசிகர்களுடன் சகஜமாக ரஜினிகாந்த் கலந்துரையாடும் வீடியோக்கள் பரவி வருகிறது.

இந்த நிலையில், தலைவர் 171 படத்தில் நடிகர் அர்ஜூன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

ஏற்கனவே அஜித் மற்றும் விஜயுடன் இணைந்து நடித்துள்ள அர்ஜூன் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கவுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிராப் ஆன படம் படம் மீண்டும் உயிர்ப்பெறுகிறதா? சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படத்தின் அப்டேட்..!

விஜய் சேதுபதிக்கு சொன்ன கதையை ரஜினிக்கும் சொன்னாரா நிதிலன் சாமிநாதன்? உண்மை என்ன?

’கூலி’ டீசர், டிரைலர் கிடையாதா? வழக்கம் போல் வதந்தி பரப்பும் யூடியூபர்கள்..!

ஹாலிவுட் திரைப்படத்தில் வித்யூத் ஜம்வால்.. 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' படத்தில் முக்கிய கேரக்டர்..

மிர்னாளினி ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments