பிரபு சாலமன் இயக்கத்த்தில் உருவாகும் கும்கி 2 படத்தில் ஹீரோவாக அர்ஜுன் தாஸ்!

vinoth
சனி, 13 செப்டம்பர் 2025 (11:20 IST)
இயக்குனர் பிரபு சாலமன் தமிழில் மைனா, கும்கி போன்ற படங்களின் தனக்கான முத்திரையைப் பதித்து முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவரின் கடைசி சில படங்கள் தோல்வி அடைந்து அவரை புகழ் வெளிச்சத்தில் இருந்து மறைய வைத்தன. கடைசியாக அவர் இயக்கிய செம்பி திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் தன்னுடைய ஹிட் படமான கும்கி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படமும் யானைகளைப் பற்றிய படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்தபடத்தின் ஒளிப்பதிவாளர் சுகுமார் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்களை வெளியிட்டு படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அறிவித்துள்ளார்.

சமீபத்தில் ‘கும்கி 2’ படத்தின் அப்டேட்டை வெளியிட்டார் பிரபு சாலமன். ஆனால் படத்தில் கதாநாயகனகாக நடிப்பது யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. ஆனால் அந்த படத்தில் கதாநாயகனாக அர்ஜுன் தாஸ்தான் நடித்துள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பைசன் படம் பார்த்தப்போ என்னையே பார்த்த மாதிரி இருந்துச்சு! - அண்ணாமலை நெகிழ்ச்சி!

தனுஷின் ‘இட்லி கடை’ ஓடிடி ரிலீஸ்.. தேதி என்ன? எந்த ஓடிடி?

இந்திய மெகா சீரியலில் நடிக்கும் பில்கேட்ஸ்! உறுதிப்படுத்திய ஸ்மிருதி இரானி!

மனோரமா மகன், தேவா தம்பி.. ஒரே நாளில் தமிழ் திரையுலகில் 2 மரணங்கள்.. கண்ணீர் அஞ்சலி..!

பிரபல இசை நிறுவனத்தின் மேல் அதிருப்தியில் சந்தோஷ் நாராயணன்… என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments