Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகைகளை கவர்ச்சி ஆடையில் பார்க்க சினிமாவுக்கு வருகிறார்களா? : நடிகை மஞ்சிமா மோகன் ட்வீட்!

Webdunia
புதன், 10 மே 2017 (10:01 IST)
சினிமா "நடிகைகள், கவர்ச்சியாக உடை அணிந்தால்தான், பணம் கொடுத்துப் படம் பார்க்கும் ரசிகர்கள் மகிழ்ச்சியடைவார்கள். அதனால், எனது படங்களில் நடிகைகளின் ஆடை கவர்ச்சியாக இருப்பதை உறுதி செய்வேன்" என்று தமிழ் திரைப்பட இயக்குநர் சுராஜ் தெரிவித்திருந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 
நடிகைகள் தமன்னா, நயன்தாரா உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து, சுராஜ் மன்னிப்புக் கோட்டார். தற்போது உடை பற்றி ட்வீட் போட்ட நபருக்கு மஞ்சிமா அளித்த பதில் ட்வீட்டில், ஹீரோயின்களை நிர்வாணமாக பார்க்கத் தான்  மக்கள் தியேட்டருக்கு வருகிறார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. 
 
”நல்ல படத்தை பார்க்க தான் வருகிறார்கள், ஆடை குறைப்பதை பார்க்க அல்ல” என கூறியுள்ளார். ஒரு வடக்கன் செல்ஃபி  படம் மூலம் ஹீரோயின் ஆனவர் கேரளாவை சேர்ந்த மஞ்சிமா மோகன். அச்சம் என்பது மடமையடா படம் மூலம் கோலிவுட்  வந்தார்.
 
தற்போது விக்ரம் பிரபு ஜோடியாக சத்ரியன் படத்தில் நடித்து முடித்துள்ளார் மஞ்சிமா. உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக இப்படை வெல்லும் படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் அடுத்த படத்தை இயக்குவது தனுஷா? கார்த்திக் சுப்புராஜா? பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் யூடியூபர்கள்..!

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்… கீர்த்தி பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சிவகார்த்திகேயனை இயக்கும் படம் எப்போது தொடங்கும்?... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

அடுத்த ‘பாண்ட் கேர்ள்’ சிட்னி ஸ்வீனியா?... ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்