Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடிச்சு பழுக்க விடாதேம்மா: கிண்டலடித்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த அர்ச்சனா

Advertiesment
அடிச்சு பழுக்க விடாதேம்மா: கிண்டலடித்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த அர்ச்சனா
, செவ்வாய், 28 ஜூலை 2020 (19:46 IST)
தொலைக்காட்சி பார்ப்பவர்களுக்கு அர்ச்சனா குறித்து தெரியாதவர்கள் இருக்க முடியாது. சரிகமபதநி என்ற நிகழ்ச்சியை சூப்பராக தொகுத்து வழங்கி வரும் அர்ச்சனா பல ஆண்டுகளுக்கு முன்பே காமெடி டைம் என்ற நிகழ்ச்சியின் மூலம் இளைஞர்கள் மனதை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அர்ச்சனா அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது புகைப்படமும் தனது மகளின் புகைப்படத்தையும் பதிவு செய்து வருவார். அந்த வகையில் புதிய தோடு அணிந்தால் தனது மகளின் புகைப்படத்தை சமீபத்தில் அவர் பதிவு செய்துள்ளார் 
 
webdunia
இந்த புகைப்படத்திற்கு கமெண்ட் அடித்த ஒரு ரசிகர் ’அடித்து பழுக்க விடாதேம்மா, இந்த இளம் தோலுக்கு இவ்வளவு மேக்கப் தகுமா?’ என்று கிண்டலடித்தார். அந்த ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அர்ச்சனா கூறியதாவது: எனது மகள் என்ன மேக்கப் போட்டு உள்ளார். அவர் ஒரு ஒரே ஒரு தோடு மட்டும்தான் போட்டுள்ளார். அது உங்களுக்கு மேக்கப்பா? வெறுப்பை தயவுசெய்து பரப்ப வேண்டாம். அடுத்த முறை புத்திசாலித்தனமாக யோசித்து வெற்றி பெறுங்கள்’ என்று கூறியுள்ளார். ரசிகரின் கிண்டலான கேள்விக்கு பதிலடி கொடுத்த அர்ச்சனாவின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

த்ரிஷா உயர்ஜாதி பெண்: மீராமிதுனின் சர்ச்சைக்குரிய வீடியோ!