Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிலிஸுக்கு தயாரான சதுரங்க வேட்டை 2 திரைப்படம்!

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (16:21 IST)
ஹெச் வினோத் கதை, திரைக்கதை வசனத்தில் உருவான சதுரங்கவேட்டை 2 திரைப்படம் இப்போது ஓடிடியில்  வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி இயக்குனராக இருக்கும் ஹெச் வினோத் முதன் முதலில் இயக்கிய திரைப்படம் சதுரங்க வேட்டை. அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அதன் இரண்டாம் பாகத்துக்காக கதை, திரைக்கதை மற்றும் வசனத்தை அவர் எழுதிக் கொடுத்தார்.

அந்த படத்தில் அரவிந்த் சாமி கதாநாயகனாகவும், ஹீரோயினாக த்ரிஷாவும் நடித்துள்ளார். ‘சலீம்’ படத்தை இயக்கிய நிர்மல் குமார் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். மனோபாலா தயாரித்துள்ள இந்தப் படம், ஆயுத பூஜைக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தயாரிப்பாளருக்கும் அரவிந்த் சாமிக்கும் இடையே பிரச்சனை எழுந்ததால் சில ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் முடங்கி கிடந்தது.

அதில் முக்கியப் பிரச்சனையாக அரவிந்த்சுவாமிக்கு ஒரு கோடி ரூபாய் வரை சம்பள பாக்கியை தயாரிப்பாளர் வைத்திருந்தது என சொல்லப்பட்டது. இந்நிலையில் படத்தைப் பற்றி கேள்விபட்ட பலரும் இந்த படம் ரிலிஸானால் நல்ல வரவேற்பைப் பெரும் எனக் கூறி தயாரிப்பாளருக்கும் அரவிந்த்சுவாமிக்கும் இடையே சமாதானம் செய்யவைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அரவிந்த்சுவாமி ஒரு குறிப்பிட்ட தொகையை விட்டுக்கொடுத்துள்ளாராம். விரைவில் இந்த படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளை மனோபாலா செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் ப்ரதீப்புக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப் பட்டுள்ளேன்… விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி!

சௌந்தர்யா தயாரிப்பில் அசோக் செல்வன் நடித்த வெப் சீரிஸ் கைவிடப்பட்டதா?

இயக்குனரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படத்தைக் கைவிட்டாரா விஷ்ணு விஷால்?

25 ஆண்டுகளுக்கு முன்னர் சீமான் இயக்கத்தில் நடிக்க இருந்த ‘காதல் ஒழிக’.. பார்த்திபன் பகிர்ந்த மலரும் நினைவுகள்!

ஜியோ- ஹாட்ஸ்டார் இன்று முதல் இணைப்பு.. இனிமேல் ஐபிஎல் போட்டிகள் இலவசம் கிடையாது..!

அடுத்த கட்டுரையில்
Show comments