Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்னது அரபிக் குத்து பாட்டு படத்துல இருக்காதா? அதிர்ச்சியைக் கிளப்பிய செய்தி!

Advertiesment
என்னது அரபிக் குத்து பாட்டு படத்துல இருக்காதா? அதிர்ச்சியைக் கிளப்பிய செய்தி!
, செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (16:10 IST)
விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல் வெளியாகி வைரல் ஹிட் ஆகியுள்ளது.

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏபரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அரபி குத்து பாட்டு ஒன்று பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகி பேன் இந்தியா ஹிட் ஆகி உள்ளது.

இந்த பாடல் வெளியானது முதல் தீயாய் பரவி வருகிறது. ரசிகர்கள் முதல் திரை உலகினர் வரை இந்த பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் பாடல் வெளியாகி 7 நாட்கள் ஆன நிலையில் நேற்று 70 மில்லியன் வியூஸ் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

இந்நிலையில் இந்த பாடலைப் பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் படத்தின் ஓட்டத்துக்கு தடையாக இருக்கும் என்பதால் படம் முடிந்த பின்னர் இறுதியில்தான் வருமாம். ஏற்கனவே நெல்சன் இயக்கத்தில் உருவான டாக்டர் திரைப்படத்தின் செல்லம்மா பாடலும் இதுபோல கடைசியாகதான் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வழக்கம் போல முட்டாளதனமான செய்தி… காதல் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் தேவாரகொண்டா!