அவென்ஜ்ர்ஸ் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் !

திங்கள், 25 மார்ச் 2019 (17:49 IST)
இந்திய சினிமாவில் அசைக்கமுடியாத இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரகுமான் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க தனக்கென ஒரு ரசிகா் கூட்டத்தை வைத்திருப்பவா்.மேற்கித்திய இசையை நம்நாட்டினா் கேட்டுக்கொண்டிருந்ததை காலத்தை மாற்றி தன் திறமையால் நம் நாட்டின் இசையை உலகம் முழுக்க பரவச் செய்தவா்.
 

 
கடந்த இருப்பைந்து ஆண்டுகளாக உலகையே தன் இசை ராஜ்ஜியத்தால் கட்டிபோட்டிருக்கும் இசைப்புயல் ஏ.ஆா்.ரகுமான் திரைத்துறையில் உள்ள பல ஜாம்பவான்களின் லட்சிய கனவான அவென்ஜ்ர்ஸ்  சீரிஸில் இசையமைவுள்ளாராம். 
 
2018-ல் உலக பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்ட திரைப்படம் அவென்ஜ்ர்ஸ் "இன்ஃபினிட்டி  வார்" சூப்பர் ஹீரோக்கள் படங்களை தயார் செய்யும் மார்வெல் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவான இந்த படம் இந்தியாவிலும் அபார வசூலை அள்ளி குவித்தது.
 
இதனை கருத்தில் கொண்டு மார்வெல் தயாரிப்பு நிறுவனம்,பிரபல இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸை அவென்ஜ்ர்ஸ் எண்ட் கேம் பதிப்புக்கு வசனம் எழுத ஒப்பந்தம் செய்தது.
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள சுவாரஸ்ய தகவல் என்னவென்றால், இந்த படத்திற்காக ஒரு சிறப்பு பாடலை இசையமைக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை மார்வெல் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதாம். 
 
தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இந்த பாடல் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே ஏப்ரல் 26ந் தேதி வெளியாவுள்ளது.இப்பாடல் வெளியானதும் வெறித்தனமான வசூல் வேட்டை நடத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் நடிகை சாய் பல்லவியை இரண்டாவது திருமணம் செய்யப்போகும் விஜய்?