Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்னியின் செல்வனில் வைரமுத்து இருக்கிறாரா?? ஏ.ஆர்.ரகுமான் விளக்கம்

Arun Prasath
திங்கள், 6 ஜனவரி 2020 (19:42 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வைரமுத்து இருக்கிறாரா? இல்லையா? என்பது குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் விளக்கம் அளித்துள்ளார்.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற பிரபலமான தமிழ் நாவலை இயக்குனர் மணி ரத்னம் இயக்கவுள்ளார். இதில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ்,  உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்க உள்ளனர். இதற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.

இத்திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று சமீபத்தில் வெளியானது. அதில் இத்திரைப்படத்திற்கு பாடல்கள் யார் யார் எழுதுகிறார்கள் என்ற அறிவிப்பை வெளியிடவில்லை. மேலும் வைரமுத்து இத்திரைப்படத்திற்கு பாடல்கள் எழுதவில்லை எனவும் செய்திகள் பரவின.

இந்நிலையில் இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த ஏ.ஆர்.ரகுமான் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் ”பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வைரமுத்து இருக்கிறாரா என்பதை மணி ரத்னமே கூறுவார், மணி ரத்னம் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வரும்” என கூறியுள்ளார். மணி ரத்னம்-வைரமுத்து-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி மக்களை வெகுவாக ரசிக்க வைத்த கூட்டணி என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? வேகமாக பரவி வரும் வதந்தி..!

நடிகை பிந்து போஸுக்கு கே.பி.ஒய் பாலா வழங்கிய உதவி.. ஷகிலா எடுத்த பேட்டி..!

ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

மணிகண்டனின் ‘குடும்பஸ்தன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments