Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனிருத், சாய் அப்யங்கர் எல்லாம் இருப்பது எனக்கு நன்மைதான்… ஏ ஆர் ரஹ்மான் பதில்!

vinoth
சனி, 24 மே 2025 (10:47 IST)
தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக கருதப்படுபவர்  ஏ ஆஎ ரஹ்மான். உலகளவில் புகழ்பெற்ற இவர் 32 ஆண்டுகளாக இசையமைப்பாளராக கொண்டாடப்பட்டு வருகிறார். இவருக்கும் சாய்ரா பானுவுக்கும் இடையே 1995 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென சாய்ரா பானு ஏ ஆர் ரஹ்மானை விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்தார். இது சம்மந்தமாக ரஹ்மான் மீது சில அவதூறுகள் வீசப்பட்டன. அதன் காரணமாக அவர் சினிமாவில் இருந்து ஒரு சிறு இடைவெளியை எடுத்துக்கொண்டு தற்போது மீண்டும் தக்லைஃப் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார்.

தக் லைஃப் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் அவரிடம் “உங்களிடம் இருந்து நிறைய பேர் சென்று இசையமைப்பாளர்கள் ஆகியுள்ளார்கள். அது உங்களுக்கு சந்தோஷமா இல்லை பொறாமையா?” என்ற கேள்வியை எழுப்பினர். அதற்கு அவர் “அது எனக்கு மிகவும் சந்தோஷமானதுதான். நிறைய பேர் இருப்பதால் குறைவான படங்களே வருகின்றன. குறைவான படங்கள் செய்தால்தான் தரத்தில் கவனம் செலுத்த முடியும். நிறைய பேர் இல்லை என்றால் என்னிடம் நிறைய பேர் வருவார்கள். நான் பண்ண முடியாது என்று சொன்னால் கோபித்துக் கொள்வார்கள்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பராசக்தி படத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை… இயக்குனர் சுதா கொங்கரா பதில்!

சில ஆண்டுகளுக்கு முன்னர் கோலி என்னைத் தெரியாது என்றார்… ஆனால் இப்போ? – சிம்பு பகிர்ந்த தகவல்!

நாயகனை விட தக் லைஃப் சிறப்பாக வரவேண்டும் என ஆசைப்பட்டோம்… வந்திருக்கிறதா?- கமல் கொடுத்த அப்டேட்!

சினிமாவில் 60 ஆண்டுகள் நிறைவு… வெண்ணிற ஆடை மூர்த்தி வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!

ஆரம்பமே சிக்கலா?... சிம்பு 49 படத்தின் தயாரிப்பாளரை மாற்ற ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments