இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 'ஹார்மோனி வித் ஏ.ஆர்.ரஹ்மான்' என்ற புதிய இசைத் தொகுப்பை  சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ளார்.
	
 
									
										
								
																	
	
	 
	சுதந்திர தினத்தை முன்னிட்டு  ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த 'வந்தே மாதரம்' என்ற பாடல் மொழி, இனம் கடந்து அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.
	 
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	
	அப்படி இருக்கையில் 72வது சுதந்திர தினமான இன்று 'ஹார்மோனி வித் ஏ.ஆர்.ரஹ்மான்' என்ற புதிய இசைத் தொகுப்பை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.
	 
 
									
										
			        							
								
																	
	இந்தப் பாடல் அமேசான் பிரைம்-ல் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் பரவலாக இருக்கும் இசை வடிவங்களையும், இசைக்கலைஞர்களையும் ஒரே தொகுப்பாக கொடுத்திருக்கும் ரஹ்மானின் இந்த முயற்சி தற்போது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.