தேசிய விருது பெற்ற ஜி வி பிரகாஷுக்கு பரிசளித்த ஏ ஆர் ரஹ்மான்!

vinoth
புதன், 1 அக்டோபர் 2025 (16:29 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இருந்து வருகிறார் ஜி வி பிரகாஷ். இடையில் நடிப்புக்காக இசையமைப்பதைக் குறைத்துக் கொண்டாலும், தற்போது நடிப்பை விட இசைக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.

2013 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ், தனது பள்ளிகால தோழியும் பாடகியுமான சைந்தவியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குக் கடந்த 2020 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் இருவரும் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதனால் அவர் மேல் கடுமையான விமர்சனங்கள் எழுந்தாலும் அவர் தன் பணிகளில் பிஸியாக உள்ளார்.

2023 ஆம் ஆண்டு வெளியான ‘வாத்தி’ படத்துக்காக அவர் சிறந்த இசையமைப்பாளர் விருதைப் பெற்றார். அதைப் பாராட்டும் வகையில் ஏ  ஆர் ரஹ்மான் தான் பயன்படுத்தி வந்த வெண்ணிற பியானோவை ஜிவிக்குப் பரிசாக அளித்துள்ளார். அதைப் பகிர்ந்துள்ள ஜி வி பிரகாஷ் “இதைவிட வேறு எனக்கு என்ன சிறந்த பரிசு கிடைத்துவிட முடியும்?” என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எம்ஜிஆரையே எதிர்த்து கேள்வி கேட்டவரு மகேந்திரன்.. அவர பத்தி ராஜகுமாரனுக்கு என்ன தெரியும்?

நிதி அகர்வாலின் கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

டியூட் படத்தில் இருந்து ‘கருத்த மச்சான்’ பாடலை நீக்கவேண்டும்… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்தி படத்துக்காக மூன்று மடங்கு சம்பளத்தைக் குறைத்துக் கொண்டாரா தனுஷ்?

அடுத்த கட்டுரையில்
Show comments