Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் 60 படத்தின் இசையமைப்பாளர் இவரா? வெளியான சமீபத்திய தகவல்!

Webdunia
புதன், 31 ஜூலை 2019 (12:07 IST)
நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை படத்தை  தொடர்ந்து மீண்டும் எச்.வினோத், போனி கபூர் கூட்டணியில் இணைந்துள்ளார். இப்படம் பைக் ரேஸ் கதையை மையப்படுத்தி உருவாகவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. 


 
வருகிற ஆகஸ்ட் 8ம் தேதி நேர்கொண்ட பார்வை படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இதற்கிடையில்  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், அஜித்தின் அடுத்த படத்தை தானே இயக்கவுள்ளதாகவும், அதில் அஜித் பைக் ரேஸராக நடிக்கவுள்ளதாகவும் தனது ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் போனி கபூர். 


 
இந்நிலையில் தற்போது மீண்டும் இப்படத்தை பற்றிய மாற்றொரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. AK 60 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு இசைப்புயல்  ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. மேலும் சமீபத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், ஏ.ஆர்.ரகுமானை சந்தித்ததாக கூறப்படுகிறது. எனவே கூடிய விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments