Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடி: மலிவான அரசியல் என மகள் வேதனை..!

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (11:03 IST)
ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடியில் மலிவான அரசியல் செய்வதாக அவரது மகள் கதீஜா வேதனையுடன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். 
 
இந்த குளறுபடிக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது தான் 100% தவறு இருக்கிறது என்றும் ஆனால் என் தந்தை மோசடி செய்தது போல் சமூக வலைதளங்களில் பேசுவது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் தெரிவித்தார்.
 
மேலும்  கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழகத்தில் வெள்ளம் வந்தபோது மக்களுக்காக இசை நிகழ்ச்சியை நடத்தி உதவி செய்தவர் எனது தந்தை என்றும் 2018 ஆம் ஆண்டு கேரளாவில் வெள்ளம் வந்தபோதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட போதும் 2022-ம் ஆண்டு லைட்மேன்களுக்காக இலவச இசை நிகழ்ச்சி நடத்தும் ஏராளமான உதவியை செய்துள்ளார். 
 
ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டு இந்த தவறை எனது தந்தை மீது சுமத்தி மலிவான அரசியல் செய்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரெய்னா ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு தோனி செய்யப்போகும் ப்ரமோஷன் உதவி!

ஹாலிவுட் கார் ரேஸ் படங்களில் நடிக்க அழைப்பு வந்தால் நடிப்பேன்… அஜித் பதில்!

அதே டெய்லர்.. அதே வாடகை! டைனோசர் பழசு! ஆளுங்க மட்டும் புதுசு! - ஜுராசிக் வேர்ல்டு ரீபர்த் விமர்சனம்!

இரண்டாம் நாளில் அதிகரித்த பறந்து போ படத்தின் வசூல்!

விஜய்யின் ஸ்டைல்தான் தயாரிப்பாளர்களுக்கு ஜாக்பாட்… ஆனால் யாரும் பின்பற்றுவதில்லை- தில் ராஜு கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments