Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷூட்டிங்கில் விபத்து… நூலிழையில் உயிர் பிழைத்த ஏ ஆர் ஆர் அமீன் !

Webdunia
திங்கள், 6 மார்ச் 2023 (08:29 IST)
ஏ ஆர் ரஹ்மானின் மகனான ஏ ஆர் ஆர் அமீன், ரஹ்மான் இசையில் ஓ கே கண்மணி படத்தில் இடம்பெற்ற மௌலானா என்ற பாடலின் மூலம் அறிமுகம் ஆனார். அடுத்தடுத்து இப்போது அவர் பாடல்கள் பாடி நடித்தும் வருகிறார். இசைத்துறையில் பலராலும் திறமை வாய்ந்த புதுப் பாடகர் எனக் கருதப்படும் ஏ ஆர் அமீன், தமிழில் அவரது முதல் சுயாதீன பாடலான சகோவை சோனி மியூசிக் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் தான் கலந்துகொண்ட படப்பிடிப்பு ஒன்றில் விபத்தில் இருந்து நூலிழையில் தப்பித்ததாக பதிவிட்டுள்ளார். அவரது பதிவில் “இன்று நான் பாதுகாப்பாக இருப்பதற்கு இறைவனும், எனது நலன் விரும்பிகளுக்கும் நன்றி. மூன்று நாட்களுக்கு முன்னர் ஒரு ஷூட்டிங்கில் இருந்தேன். நான் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தேன். அப்போது கிரேனில் பொருத்தப்பட்டு இருந்த விளக்குகள் எனக்கு சற்று அருகே விழுந்தன. ஒரு சில அங்குலங்களோ, வினாடிகளோ முன்னும் பின்னும் ஆகி இருந்தால் மொத்த ரிக்கும் எங்கள் மேல் விழுந்திருக்கும்.  அந்த அதிர்ச்சியில் இருந்து என்னால் மீளமுடியவில்லை” எனக் கூறியுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by “A.R.Ameen” (@arrameen)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கில்லி’ பக்கத்தில் கூட வரமுடியாது.. ‘சச்சின்’ வசூல் இவ்வளவுதான்..!

விஜய்சேதுபதி மகனின் முதல் படம்.. ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு..!

‘மதகஜ ராஜா’ திரைப்படம் ஏன் இன்னும் ஓடிடியில் வெளியாகவில்லை: படக்குழு விளக்கம்..!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஹோம்லி லுக்கில் ஷிவானி நாராயணனின் லேட்ட்ஸ்ட் புகைப்படங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments