Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கட்சி நிச்சயம்;இது வேத சத்தியம்..

Advertiesment
கட்சி நிச்சயம்;இது வேத சத்தியம்..

Arun Prasath

, புதன், 4 டிசம்பர் 2019 (12:34 IST)
அடுத்த ஆண்டு ரஜினிகாந்த் நிச்சயமாக கட்சி தொடங்குவார் என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் கடந்த 15 வருடங்களாக கட்சி தொடங்குவாரா? மாட்டாரா? என்ற எதிர்ப்பார்ப்பில் அவரது ரசிகர்கள் காத்திருந்தனர். இது குறித்து அவரிடம் கேள்விகள் பல கேட்கப்பட்ட போதும் அதற்கு ”ஆண்டவன் கையில் தான் எல்லாமே இருக்கிறது” என பதிலளித்து வந்தார்.

இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். எனினும் கட்சியின் கொள்கையை பற்றியோ பேரை பற்றியோ எதுவும் அறிவிக்கவில்லை. இதனிடையே ரஜினிகாந்த் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுகிறார் எனவும் பலர் கூறி வந்தனர். அவரது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றிய அவரது கருத்துகளும், காஷ்மீர் குறித்தான கடுத்துகளும் அவர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்ற விமர்சனங்களை கிளப்பியது.
webdunia

மேலும் அவரது பல பேட்டிகளில் தமிழகத்தில் வெற்றிடம் நிலவுகிறது என பலமுறை கூறிவந்துள்ளார். இந்நிலையில் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்த பிறகு செய்தியாளர்களை பேட்டியளித்த காந்தி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழருவி மணியன் , அடுத்த ஆண்டு நிச்சயமாக ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார் எனவும், அவர் ஆழ்ந்து சிந்திப்பவர், எந்த விஷயத்திலும் சாதக பாதகங்களை அலசி ஆராய்பவர் எனவும் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் கட்சி எப்போது தொடங்குவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்போடு இருக்கும் பட்சத்தில் தற்போது தமிழருவி மணியன் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்கும் மானம், அவமானம் கிடையாது! - நித்யானந்தா ஓபன் டாக்!