Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அப்புக்குட்டியை பீல் பண்ண வைத்த அஜித்

அப்புக்குட்டியை பீல் பண்ண வைத்த அஜித்

Advertiesment
அப்புக்குட்டியை பீல் பண்ண வைத்த அஜித்
, புதன், 28 செப்டம்பர் 2016 (14:10 IST)
அஜித்தின் வீரம், வேதாளம் ஆகிய படங்களில் அவருடன் நடித்தவர் அப்புக்குட்டி என்கிற சிவபாலன். இதையடுத்து தற்போது அஜித்-சிறுத்தை சிவா இணைந்துள்ள மூன்றாவது படத்திலும் அப்புக்குட்டி நடித்து வருகிறார்.

 
 
அப்புக்குட்டிக்காக தனியாக போட்டோ ஷுட் எல்லாம் நடத்தி அவரது கெட்டப்பையே மாற்றியவர் அஜித். இதற்கிடையில், அப்புக்குட்டி கதாநாயகனாக ‘காகித கப்பல்’ என்ற படத்திலும் நடித்து கொண்டிருக்கிறார்.
 
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அஜித்தை பற்றி ஒவ்வொரு முறையும் அப்புக்குட்டி புகழ்ந்து வந்தாலும், தற்போது அஜித் இப்படி பண்ணுவார் என்று எதிர்பார்க்கவில்லை என்று அப்புக்குட்டி பீல் பண்ணும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது.
 
இந்நிலையில் போட்டோ ஷுட்டிற்கு பிறகு அப்புக்குட்டி இப்போது ஹீரோவாக நடிக்கும் ‘காகித கப்பல்’ ஆடியோ விழா நடந்த சமயத்தில் அஜித் அவருக்கு போன் போட்டு வாழ்த்து சொல்லியுள்ளார். இதனால் அப்புக்குட்டிக்கு மிகவும் பெருமையையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளதாம். அவர் இப்படி வாழ்த்து சொல்வாருன்னு அப்புக்குட்டி கொஞ்சம்கூட எதிர்பார்க்கவே இல்லை என்கிறார்.
 
இப்படத்தில் அப்புக்குட்டிக்கு டூயட் பாடல் ஒன்று உள்ளதாம். அதில் அப்புக்குட்டி நடனம் ஆடி அசத்தியிருக்கிறாராம். பொருத்திருந்து பார்ப்போம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐஸ்வர்யா மேனன் இப்போ வடசென்னை பொண்ணு