சிங்கப்பூர் மேடம் டூசாட்ஸ்ட் அருங்காட்சியகத்தில் நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கு முழு உருவ மெழுச்சிலை நிறுவப்பட்டுள்ளது
பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கு, சிங்கப்பூரில் உள்ள மேடம் டூசாட்ஸ் அருங்காட்சியகத்தில் ஆளுயர மெழுகுச் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பார்வைக்காக அனுஷ்கா ஷர்மாவே திறந்துவைத்தார்.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் மேடம் டூசாட்ஸ் அருங்காட்சியகம், இந்தியா உட்பட லண்டன், சிங்கப்பூர், சீனா உட்பட பல நாடுகளில் உள்ளது. இந்தியாவில் மேடம் டூசாட்ஸ் அருங்காட்சியகம் டெல்லியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் விளையாட்டு, திரைத்துறை, கலைத்துறை, அரசியல், பொதுசேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை நிகழ்த்திய பிரபலங்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
இந்த சிலையுடன் அனுஷ்கா செல்ஃபி எடுப்பது போல் நிறுவப்பட்டுள்ளது. தன் சிலையுடன் அனுஷ்கா வீடியோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
இதை பார்த்த நெட்டிசன்கள் இதில் எது உண்மையான அனுஷ்கா, எது மெழுகுச்சிலை அனுஷ்கா என்று தெரியவில்லை என்று கூறிய அவர்கள், சிலையை அவ்வளவு நேர்த்தியாக வடிவமைத்துள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
https://twitter.com/AnushkaSharma/status/1064517034111848448?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1064517034111848448&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Ftamil-cinema%2Fmovie-news%2Fanushka-sharma-gets-wax-statue-at-madame-tussauds-singapore-museum%2Farticleshow%2F66700135.cms