Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பமான அனுஷ்கா அணிந்திருக்கும் உடை எவ்வளவு தெரியுமா...? கேட்டதும் மயக்கமே வந்திடும்!

Webdunia
சனி, 29 ஆகஸ்ட் 2020 (13:12 IST)
இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியும், இந்தி நடிகை அனுஷ்கா ஷர்மாவும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2017ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். எனினும் குழந்தை குறித்து இருவரும் யோசிக்க நேரமில்லாமல் அனுஷ்கா சினிமா படப்பிடிப்புகளிலும், விராட் கோலி கிரிக்கெட் போட்டிகளிலும் தீவிர ஆர்வம் காட்டி வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் தனது மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்திருந்தார் விராட் கோலி. அதையடுத்து தனது ட்விட்டரில் அனுஷ்கா சர்மா கர்ப்பமாய் இருக்கும் நிலையில் தன்னுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விராட் கோலி ”நாங்கள் மூன்று பேராக போகிறோம். ஜனவரி 2021ல்..” என்று கூறி பலரது வாழ்த்துக்களை பெற்றார்.

அதையடுத்து அனுஷ்கா அணிந்திருந்த அந்த உடை சமூக வலைத்தளங்களில் சூப்பர் வைரலானது. கருப்பு நிறத்தில் வெள்ளை நிற புள்ளிகள் போட்டு வயிறு பகுதியில் எலாஸ்டிக்கினால் பிரிண்ட் செய்யப்பட்ட இந்த உடை கச்சிதமாக இருந்தது. இந்த ஆடை கனடா டாலர் மதிப்பில் 972 டாலர், அதாவது, இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ. 54,648. ஆனால், விற்பனையில் 486 டாலருக்கு கிடைக்கிறது.  அதாவது ரூ. 27,234 இந்த உடை கிடைக்கிறது. இனி கர்ப்பமாகும் பெண்கள் 96 த்ரிஷாவின்  மஞ்சள் நிற உடை போன்று இந்த கருப்பு கௌன் ட்ரெண்ட் ஆகிவிடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

குட் பேட் அக்லி படத்தில் விருப்பமில்லாமதான் அந்த வசனத்தைப் பேசினேன்… பிரசன்னா ஓபன் டாக்!

சூரியின் அடுத்த படத்தை இயக்கும் வெற்றிமாறனின் இணை இயக்குனர்.. முதல் லுக் ரிலீஸ் அப்டேட்!

கூலி படத்தில் அமீர்கான் நடிப்பதை உறுதி செய்த பிரபல நடிகர்!

நான் பெண்ணாக இருந்திருந்தால் கமல்ஹாசனைதான் திருமணம் செய்திருப்பேன்… பிரபல நடிகர் ஓபன் டாக்!

நடிகை நஸ்ரியாவுக்கு மனநிலை கோளாறா? மன்னிப்பு கேட்டு வெளியிட்ட கடிதத்தால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments