Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செம்ம ஆக்‌ஷன் ப்ளாக்…. அனுஷ்காவின் தமிழ் ரி எண்ட்ரி படம் பற்றிய லேட்டஸ்ட் தகவல்!

செம்ம ஆக்‌ஷன் ப்ளாக்…. அனுஷ்காவின் தமிழ் ரி எண்ட்ரி படம் பற்றிய லேட்டஸ்ட் தகவல்!
, வியாழன், 2 பிப்ரவரி 2023 (15:07 IST)
தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இவர் தொடர்ந்து நடித்து வந்தார்.

அந்த மாதிரி கதைக்களங்களில் அவர் நடித்த அருந்ததி, ருத்ரமாதேவி போன்ற படங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது. அதேபோல பிரபாஸுடன் இவர் நடித்த வரலாற்று சிறப்பு மிக்கதிரைப்படமான பாகுபலி திரைப்படம் இருக்கு பெரும் புகழும் பெற்று தந்தது. கூடவே உலகம் முழுக்க உள்ள ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்திக்கொண்டார்.

ஆனால் இஞ்சி இடுப்பழகி படத்துக்கு பின்னர் அவர் அதிகமான படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். அதிலும் தமிழ் படங்களில் அவர் தலைகாட்டவே இல்லை. இந்நிலையில் இப்போது துபாயில் கடந்த சில மாதங்களாக முகாமிட்டு தன்னுடைய யோகா பயிற்சிகளின் மூலமாக உடல் எடையை வெகுவாகக் குறைத்துள்ளாராம் அனுஷ்கா. விரைவில் அவர் நடிக்க உள்ள படத்தின் அப்டேட் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது ஏ எல் விஜய் இயக்கத்தில் அவர் ஒரு ஆக்‌ஷன் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் ராணுவக் கதையை பின்னணியாக வைத்து உருவாக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அனுஷ்கா ஏற்கனவே தெய்வ திருமகள் மற்றும் தாண்டவம் ஆகிய திரைப்படங்களில் ஏ எல் விஜய் இயக்கத்தில் நடித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சினிமாவில் 40 ஆண்டுகளைக் கடந்த மீனா… விரைவில் கொண்டாட்ட நிகழ்ச்சி!