அனுஷ்காவின் மார்கெட் பாகுபலி படத்திற்கு பின்னர் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. தனது சம்பளத்தையும் தடாலடியாக உயர்த்தினார் அனுஷ்கா.
‘பாரத் அனே நேனு’ என்னும் தெலுங்கு படத்தில் மகேஷ்பாபுடன் ஒரு குத்தாட்டப் பாடலுக்கு நடிக்க சம்மதித்துள்ளார். இதற்கு 2 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது.
தெலுங்கு சினிமாவில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடுவதைப்போல, தமிழ் சினிமாவில் ஒரு பாட்டுக்கு நடனமாட அழைத்தால் நடிப்பீர்களா என்று கேட்டால், முடியாது என தெரிவித்துள்ளார்.
அதற்கான காரணத்தையும் அனுஷ்கா தெரிவித்துள்ளார். மகேஷ்பாபு எனக்கு நல்ல நண்பர். ஒரு பாட்டுக்கு நடிக்க அழைத்தபோது என்னால் மறுக்க முடியவில்லை. இனிமேல் வேறு எந்த மொழிப் படங்களிலும் ஒரு குத்தாட்டப் பாடலுக்கு டான்ஸ் ஆட மாட்டேன் என்று விளக்கம் கூறியுள்ளார்.