தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இவர் தொடர்ந்து நடித்து வந்தார். அந்த மாதிரி கதைக்களங்களில் அவர் நடித்த அருந்ததி, ருத்ரமாதேவி போன்ற படங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது.
சமீபத்தில் அவர் நடிப்பில் தெலுங்கில் “மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் பொலிஷெட்டி என்ற படம் செப்டம்பர் 7 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ஆனால் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் எதிலும் அனுஷ்கா பங்கேற்கவில்லை.
அதற்குக் காரணம் படத்தில் அவரை கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் ஒல்லியாக காட்டியுள்ளனர். ஆனால் உண்மையில் அவர் இன்னும் உடல் எடை அதிகமாகிதான் காணப்படுகிறாராம். அதனால் இப்போது ப்ரமோஷன்களில் கலந்துகொண்டால் படத்துக்கு நெகட்டிவ்வாக அமையும் என்பதால் கலந்துகொள்வதில்லை என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படத்தை பெண்களுக்காக சிறப்புக் காட்சியாக இன்று காலை ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் சுமார் 20 திரையரங்குகளில் வெளியிட்டுள்ளனர்.