திரையரங்கில் எடுபடாத அனுஷ்காவின் ‘காட்டி’… ஓடிடி ரிலீஸிலாவது ரசிகர்களைக் கவருமா?

vinoth
வெள்ளி, 26 செப்டம்பர் 2025 (10:25 IST)
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இவர் தொடர்ந்து நடித்து வந்தார். அந்த மாதிரி கதைக்களங்களில் அவர் நடித்த அருந்ததி, ருத்ரமாதேவி போன்ற படங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது.

கடைசியாக அவர் நடித்த  “மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படத்துக்குப் பிறகு  இரண்டு ஆண்டுகளாக எந்தப் படமும் ரிலீஸாகவில்லை. அதற்கு அவர் உடல் எடையைக் குறைக்கும் பயிற்சிகளில் ஈடுபட்டதுதான் காரணம் என சொல்லப்பட்டது. இந்நிலையில் அவர் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வந்த ‘காட்டி’ என்ற திரைப்படம்  கடந்த மாதம் ரிலீஸானது. இந்த படத்துக்குப் பெரிய எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் தியேட்டரில் இந்த படம் ரசிகர்களை பெரிதாகக் கவரவில்லை.

இதனால் வசூல் ரீதியாகவும் படம் பெரிய நஷ்டத்தை சந்தித்தது. இந்நிலையில் வெளியாகி 28 நாட்கள் கழித்து தற்போது அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் ஸ்ட்ரீம் ஆகத் தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் க்யூட் போஸ் கொடுத்த அனுபமா பரமேஸ்வரன்!

வித்தியாசமான உடையில் கிளாமர் போஸில் அசத்தும் க்ரீத்தி ஷெட்டி…!

சம்பளம் வாங்காமல் ‘கேர்ள் பிரண்ட்’ படத்தில் நடித்த ராஷ்மிகா..!

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகும் ‘காதல்.. Reset… Repeat’… கவனம் ஈர்த்த ப்ரோமோ!

கணவருக்கு ஆதரவாக பதிவிட்ட மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி!

அடுத்த கட்டுரையில்
Show comments