Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசாங்கத்திடம் எந்த திட்டமும் இல்லை! பிரபல இயக்குனர் காட்டம்!

Webdunia
திங்கள், 4 மே 2020 (08:38 IST)
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப் லாக்டவுன்கள் நீடித்துக் கொண்டேதான் இருக்கும் என தனது சமூகவலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தன் படங்களுக்காக உலக சினிமாவில் இந்திய சினிமாவின் முகமாக அறியப்படுபவர் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப். மேலும் இப்போது அவர் பாலிவுட் மற்றும் தமிழ் சினிமாவிலும் நடித்துள்ளார். இந்நிலையில் பாஜக தலைமையிலான அரசின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சனமும் செய்து வருகிறார். பாஜக ஆட்சியில் நடக்கும் கும்பல் தாக்குதல் குறித்து அவர் விமர்சிக்க அது வலதுசாரிகளால் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்நிலையில் இப்போது மூன்றாவது முறையாக மத்திய அரசு லாக்டவுனை நீட்டித்துள்ள நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ஊரடங்குகள் தொடர்ந்து கொண்டே தானிருக்கும்... அவை தளர்த்தப்பட போவதில்லை. அரசாங்கத்திடம் எந்தத் திட்டமும் இல்லை. பணமும் இல்லை. பொருளாதார அறிஞர்களும், விஞ்ஞானிகளும், கார்ப்பரேட்டுகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு தீர்வைக் காண வேண்டிய நேரம் இது. அதற்கான முன்முயற்சி பிரதமரிடமிருந்து வர வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

அனுராக் காஷ்யப்பின் இந்த கருத்துக்கு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் ஒருசேர எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments