Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருவான்மியூர் காய்கறி வியாபாரிக்கு கொரோனா: இழுத்து மூடப்பட்ட மார்க்கெட்

Advertiesment
திருவான்மியூர் காய்கறி வியாபாரிக்கு கொரோனா: இழுத்து மூடப்பட்ட மார்க்கெட்
, திங்கள், 4 மே 2020 (07:47 IST)
திருவான்மியூர் காய்கறி வியாபாரிக்கு கொரோனா:
தமிழக சுகாதாரத் துறையினர் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டாலும் சென்னையில் கட்டுக்கடங்காத வகையில் தினமும் மிக அதிகமானவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 203 பேர்கள் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் காய்கறி மார்க்கெட்டுகளால் தான் அதிகமாக கொரோனா தொற்று பரவுவதாக செய்திகள் வெளியானதை அடுத்து காய்கறி மார்க்கெட்டுக்கள் மூடப்பட்டு வருகிறது. ஏற்கனவே தேனாம்பேட்டையில் உள்ள காய்கறி மார்க்கெட் மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது திருவான்மியூர் சந்தையும் மூடப்பட்டு அதை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள பொது அறிவிப்பு ஒன்றில் கூறப்பட்டிருப்பதாவது: திருவான்மியூர் காய்கறி சந்தையில் ஒரு காய்கறி வியாபாரிக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாகத்தான் இன்று முதல் காய்கறி சந்தை மூடப்பட்டு அப்பகுதியில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு அங்கு உள்ள வியாபாரிகள் மற்றும் பிற பணியாளர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் அமைக்கப்பட்ட சந்தை அங்கிருந்து வாகனம் நிறுத்தும் இடம், வடக்குமாட வீதி மற்றும் கிழக்கு மாட வீதி என மூன்று பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. அப்பகுதியில் மேலும் சில இடங்களை கண்டறிந்து அங்கே சந்தை விரிவாக்கம் செய்யப்பட்டு மே 6 புதன்கிழமை முதல் செயல்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது 
 
கொரோனா காரணமாக காய்கறி கடைகள் மூடப்பட்டும், மாற்றப்பட்டும் வருவது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா வார்டுகள் நிரம்பியதால் ஆம்புலன்ஸில் காத்திருந்த நோயாளிகள்: சென்னையிலும் அமெரிக்கா நிலை