விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் இயக்குனர் அனுராக் காஷ்யப்!

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (09:19 IST)
விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் இயக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது. விதார்த், பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் உருவான குரங்கு பொம்மை படத்தை இயக்கியவர் நித்திலன். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்து அவர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார்.

இந்த படம் ஆக்‌ஷன் படமாக உருவாக உள்ளதாக இயக்குனர் நித்திலன் கூறியுள்ளார். படத்தின் கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் நட்டி நட்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில் படத்தில் வில்லனாக நடிக்க, அனுராக் காஷ்யப் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. பாலிவுட்டின் முன்னணி இயக்குனரான அனுராக் காஷ்யப் ஏற்கனவே தமிழில் இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தியேட்டர்ல்ல ஒரு ஹிட் கொடுக்க தெரியல, என்ன கிண்டல் பண்ண வந்துட்டாங்க.. சூர்யா ரசிகர்களை பொளந்த மோகன் ஜி

டைகர் ஹா ஹுக்கும்! ஜெயிலர் 2 ஷூட்டிங் வீடியோவை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த துருவ் விக்ரம், அனுபமா! கலகலக்கும் தீபாவளி Celebration!

காந்தாரா சாப்டர் 1 வசூல் சாதனை! ராமேஸ்வரத்தில் தரிசனம் செய்த ரிஷப் ஷெட்டி!

’அவன் வந்துவிட்டான்’.. நடிகை ப்ரினிதி சோப்ரா வீட்டில் சின்ன தீபாவளி..

அடுத்த கட்டுரையில்
Show comments