Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கெளதம் மேனனுக்குப் பதில் அனுராக் கஷ்யப்

கெளதம் மேனனுக்குப் பதில் அனுராக் கஷ்யப்
, வெள்ளி, 26 மே 2017 (12:20 IST)
அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில், கெளதம் மேனனுக்குப் பதில் அனுராக் கஷ்யப் நடித்திருக்கிறார்.


 

கெளதம் மேனன் படங்களின் வில்லன்களுக்கு என தனி மவுசு உண்டு. சொல்லப்போனால், ஹீரோவுக்கு இணையாக வில்லன்களின் கேரக்டரும் இருக்கும். பெரும்பாலான படங்களில், வில்லனுக்கு கெளதம் மேனன் தான் டப்பிங் பேசியிருப்பார். அதுமட்டுமல்லாமல், ‘காக்க காக்க’ மற்றும் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில், வில்லனாக சிறிய கேரக்டரில் நடித்திருப்பார்.

நயன்தாரா நடிப்பில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தை இயக்கியுள்ள அஜய் ஞானமுத்து, இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கவைக்க கெளதம் மேனனைத்தான் முடிவு செய்தாராம். கதை எழுதும்போது, கெளதம் மேனனைத்தான் மனதில் வைத்து எழுதினாராம். ஆனால், என்ன காரணத்தினாலோ அனுராக் கஷ்யப்பை அந்த கேரக்டரில் நடிக்க வைத்திருக்கிறார் அஜய் ஞானமுத்து.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவாஜி கேரக்டரில் நாகர்ஜுனா