நடிகை அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் கவனத்தைப் பெற்று வருகிறது.
2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் அந்த நடிகை. அந்த படத்தின் அபரிமிதமான வெற்றியால் மூன்று நாயகிகளுமே பிரபலமானார்கள். அதில் ஒருவரான அனுபமா பரமேஸ்வரனுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை என்றாலும் இந்திய கிரிக்கெட் வீரர் அனுபமா பரமேஸ்வரனோடு காதல் உள்ளதாக கிசுகிசுக்கள் பரவியதால் ஹாட் டாபிக் ஆனார். ஆனால் பூம்ராவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது.
இந்நிலையில் இப்போது சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் நிலையில் அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அப்படி சமீபத்தில் பகிர்ந்த புகைப்படம் ஒன்று கவனத்தை ஈர்த்துள்ளது. தனது சுருட்டை முடி முகத்தில் படர இருக்கும் அந்த புகைப்படத்தில் மதிய உணவுக்கு நூடுல்ஸ் என்று கேப்ஷன் கொடுத்து தன்னைத் தானே கலாய்க்கும் விதமாக பதிவு செய்துள்ளார்.