வெளியானது ப்ளு சட்ட மாறனின் ஆண்டி இந்தியன் மோஷன் போஸ்டர்!

Webdunia
வெள்ளி, 14 மே 2021 (09:03 IST)
ப்ளு சட்ட மாறன் இயக்கியுள்ள ஆண்டி இன்டியன் படத்தின் மோஷன் போஸ்டர் ரம்ஜான் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது.

சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ’ஆண்டி இந்தியன்’ என்ற திரைப் படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர முடியாது என சென்சார் அதிகாரிகள் கூறியதாக வெளியில் தகவல் வெளிவந்துள்ளது. ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் நரேன், ராதாரவி உள்பட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் ’ஆண்டி இந்தியன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து சமீபத்தில் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்துவிட்டு சர்ச்சைக்குரிய காட்சிகள் படம் முழுவதும் இருப்பதால் இந்த படத்துக்கு சென்சார் சான்றிதழ் தர முடியாது என்று கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இதையடுத்து மறு சென்ஸாருக்காக படத்தை அனுப்பும் முடிவில் படக்குழுவினர் இருக்கின்றனர். இந்நிலையில் இன்று ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இந்த படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். வித்தியாசமான முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர் மத நல்லிணக்கத்தையும், அரசியல் நய்யாண்டியையும் கொண்டிருக்கும் படம் எனக் காட்டுகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எஜமான் காலடி மண்ணெடுத்து.. ரஜினியின் 75வது பிறந்த நாளில் ரீரிலீஸ் ஆகும் எஜமான்..!

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments