Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீரப்பன் குறித்த மற்றொரு டாக்குமெண்ட்ரி தொடர்!... சூர்யா வெளியிட்ட டிரைலர்!

Advertiesment
வீரப்பன் குறித்த மற்றொரு டாக்குமெண்ட்ரி தொடர்!... சூர்யா வெளியிட்ட டிரைலர்!
, வெள்ளி, 24 நவம்பர் 2023 (14:14 IST)
2000களில் இந்தியாவை மிரள செய்த ஒரு பெயர் வீரப்பன். தமிழக – கர்நாடக எல்லையில் உள்ள கோபிநத்தம் கிராமத்தில் பிறந்த வீரப்பன் யானை தந்தம் கடத்தல், சந்தன கடத்தல் என பல குற்ற செயல்கள் புரிந்ததோடு, பல காவல்துறை, வனத்துறை அதிகாரிகளையும் கொன்றதற்காக தேடப்பட்டு கொல்லப்பட்ட ஒரு நபர். இன்று வரையில் வீரப்பனின் கதை சர்ச்சைக்குரிய ஒரு கதையாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் “The hunt for veerappan” என்ற தொடர் நெட்பிளிக்ஸில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில் இப்போது ஜி 5 ஓடிடி தயாரிப்பில் கூஸ் முனிசாமி வீரப்பன் என்ற மற்றொரு டாக்குமெண்டரி தொடர் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த தொடரில் நக்கீரன் நிறுவனத்தால் வீரப்பனிடம் நேரில் எடுக்கப்பட்ட இதுவரை வெளிவராத பல வீடியோக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த தொடரின் டிரைலரை நேற்று நடிகர் சூர்யா தன்னுடைய யுடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டிரைலர் இப்போது கவனம் பெற்றுள்ளது. டிசம்பர் 8 ஆம் தேதி முதல் இந்த தொடர் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குட்னைட் பட கதாநாயகிக்கு நடந்த நிச்சயதார்த்தம்!