Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீராமிதுன் மீது மற்றொரு வழக்கு: காவலில் எடுத்து விசாரிக்க முடிவு!

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (09:43 IST)
நடிகை மீரா மிதுன் ஏற்கனவே வன்கொடுமை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நிலையில் அவர் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த வழக்கில் அவரை காவலில் எடுத்து விசாரணை செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
 
பட்டியல் இனத்தவர் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து கேரளாவில் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் 
 
இந்த நிலையில் வன்கொடுமை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சிறையில் உள்ள நடிகை மீரா மிதுனை மற்றொரு வழக்கில் காவலில் எடுத்து விசாரிக்க எம்பிகே நகர் போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை இன்று அல்லது நாளை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மீண்டும் மீராமிதுன் காவலில் எடுத்து விசாரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் நேற்று மீராமிதுன் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

யோகி பாபு நடிப்பில் உருவாகும் ‘சட்னி சாம்பார்’ வெப் சீரிஸ் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

விடுதலை 2 படத்தில் எனக்கும் மஞ்சு வாரியருக்கும் ரொமான்ஸ் இருக்கு- விஜய் சேதுபதி தகவல்!

மகாராஜா படம் பார்த்துட்டு என் மனைவி என்ன சொல்லப்போறாரோ தெரியல- நடிகர் சிங்கம் புலி!

சர்ச்சையைக் கிளப்பிய எம் எஸ் பாஸ்கரின் பேச்சு… ப்ளுசட்ட மாறன் போட்ட பதிவு!

ஒரே ஒரு அப்டேட்தான் கொடுப்பேன், எல்லாத்தையும் கேக்காதீங்க- விடாமுயற்சி குறித்து அர்ஜுன்!

அடுத்த கட்டுரையில்
Show comments