Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா எதிரொலி… ஒரு பாடலை கட் பண்ணிய அண்ணாத்த படக்குழு!

கொரோனா எதிரொலி… ஒரு பாடலை கட் பண்ணிய அண்ணாத்த படக்குழு!
, சனி, 1 மே 2021 (08:28 IST)
கொரோனா பரவல் அதிகமாக உள்ள காரணத்தால் அண்ணாத்த படத்தின் ஒரு பாடலை படமாக்க வேண்டாம் என்ற முடிவை படக்குழு எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்த திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்க இமான் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் நடந்து வந்த நிலையில் ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் படப்பிடிப்பு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும் ரஜினியின் அரசியல் அறிக்கையின் காரணமாகவும் படப்பிடிப்பு தொடங்குவதில் சுணக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து இப்போது இறுதிகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் ரஜினியின் உடல்நிலையை முன்னிட்டும் கொரோனா பரவல் உச்சத்தில் இருப்பதாலும் அவரை யாரும் தொடவோ தேவையில்லாமல் கிட்ட செல்லவே படக்குழுவினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாம்.

ஆனாலும் தேவையில்லாத ரிஸ்க் என்பதால் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை படமாக்க வேண்டாம் என்ற முடிவுக்கு சிறுத்தை சிவா வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போதைக்கு ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி விட்டு அவரை பாதுகாப்பாக அனுப்பி வைப்பதில் குறியாக உள்ளதாம் படக்குழு.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒத்த கன்னட சினிமாவுக்கு போட்டிபோடும் டஜன் தயாரிப்பாளர்கள்!