Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

படையப்பா பாதி… பாட்ஷா மீதி… ரெண்டும் சேர்ந்த கலவையா அண்ணாத்த இருக்குமாம்!

படையப்பா பாதி… பாட்ஷா மீதி… ரெண்டும் சேர்ந்த கலவையா அண்ணாத்த இருக்குமாம்!
, சனி, 3 ஏப்ரல் 2021 (15:50 IST)
நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் அண்ணாத்த திரைப்படம் பற்றி அந்த படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் தீலிப் சுப்பராயன் பேசியுள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்த திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்க இமான் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் நடந்து வந்த நிலையில் ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் படப்பிடிப்பு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும் ரஜினியின் அரசியல் அறிக்கையின் காரணமாகவும் படப்பிடிப்பு தொடங்குவதில் சுணக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் இப்போது சென்னையில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி வேகமாக நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு இந்த படம் ரிலிஸாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அண்ணாத்த படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் திலிப் சுப்பராயன் ‘அண்ணாத்த முதல் பாதி படையப்பா போலவும், இரண்டாம் பாதி பாட்ஷா போலவும் மாஸாக இருக்கும் ‘ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூரரைப் போற்று இந்தியில் டப்பிங்… அப்செட்டான ஹீரோ!