Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிக தியேட்டர்களில் ரிலீஸ ஆகும் ’’அண்ணாத்த’’ படம்

அதிக தியேட்டர்களில் ரிலீஸ ஆகும் ’’அண்ணாத்த’’ படம்
, புதன், 27 அக்டோபர் 2021 (21:46 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா உள்பட பலர் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் அமெரிக்காவில்  அதிக தியேட்டர்களில் ரிலீஸ் ஆகவுள்ளது.

இயக்குநர் சிவா இயக்கத்தில், ரஜினி, குஷ்பு,கீர்த்தி சுரேஷ், நயன் தாரா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் அண்ணாத்த. இப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில், இன்று அண்ணாத்த படத்தின் டிரைலர் ரிலீஸாகியுள்ளது. ரஜினி படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் பஞ்ச் வசனங்கள் இப்படத்தில் அதிகம் இடம் பெற்றுள்ளதால் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக இப்படம் அமையும் எனக் கூறப்படுகிறது.

மேலும், அண்ணாத்த தமிழ்ப் படம் அமெரிக்காவில் 416 தியேட்டர்களிலும், இப்படத்தின் தெலுங்கு டப்பிங் படமான பெத்தன்னா 261 தியேட்டர்களிலும் ரிலீஸாகவுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உள்ள எதுவும் போடலையா மேடம்... கோட் சூட்டில் மூடேத்திய அமலா பால்!