Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அண்ணாமலை நடித்த படத்தின் டீசர் வெளியீடு தள்ளிவைப்பு! – என்ன காரணம்!

Advertiesment
Arabi
, வெள்ளி, 27 மே 2022 (16:46 IST)
பாஜக தலைவர் அண்ணாமலை நடித்த கன்னட படமான “அரபி” என்ற படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகவிருந்த நிலையில் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி பின்னர் அதிலிருந்து விலகி விவசாயம் பார்த்தவர் அண்ணாமலை. பின்னர் இவர் தமிழக பாஜகவின் துணை தலைவராகவும், பின்னர் தலைவராகவும் ஆனார். ஐபிஎஸ் அதிகாரியாக கர்நாடகாவில் பணி செய்து வந்தவர் அண்ணாமலை.

இந்நிலையில் கன்னடத்தில் தயாராகியுள்ள “அரபி” என்ற படத்தில் நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளாராம் அண்ணாமலை. இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் பலரும் அந்த படத்தின் டீசருக்காக காத்திருந்த நிலையில் தற்போது தொழில்நுட்ப காரணங்களால் டீசர் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக பட நிறுவனம் அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காத்து வாக்குல ரெண்டு காதல்… உலக அளவில் வசூல் இவ்வளவா? வெளியான official தகவல்!