Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை அஞ்சலி நடிப்பில்,புதிய சீரிஸ்- 'பஹிஷ்கரனா'

J.Durai
திங்கள், 8 ஜூலை 2024 (14:13 IST)
முகேஷ் பிரஜாபதி இயக்கத்தில், Pixel Pictures Pvt Ltd சார்பில், பிரசாந்தி மாலிசெட்டி தயாரித்துள்ள ‘பஹிஷ்கரனா’ சீரிஸில்,அஞ்சலி, ரவீந்திர விஜய், அனன்யா நாகல்லா, ஸ்ரீதேஜ், சண்முக், மஹ்பூப் பாஷா மற்றும் சைதன்யா சாகிராஜு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர்.
 
‘பஹிஷ்கரனா’ என்பது ஒரு விபச்சாரியின் அழுத்தமான பயணத்தை  விவரிக்கும்  கதை.  இந்தக் கதை 1990களின் கிராமப்புற குண்டூரின் பின்னணியில் விரிகிறது. 
 
அங்கு விபச்சாரியாக வாழும் நாயகி, அவளின் உண்மையான வரலாறு, அவளுக்கு நிகழும் சம்பவங்கள் என இக்கதை அழுத்தமான உணர்வுகளின் பின்னணியில் மறக்க முடியாத அனுபவம் தரும் தொடராக உருவாகியுள்ளது இந்த சீரிஸ். 
 
1990களில் பெத்தபள்ளி, கிராமத்தில் வசிக்கும் எளிமையான பெண்ணான தர்ஷி , வேலையிலிருந்து திரும்பவில்லை எனும் போது, சாதாரணமாகத் தோன்றும் ஒரு நாள் இருண்டதாக மாறுகிறது. 
 
இந்த நிகழ்வு விபச்சாரி புஷ்பா, மற்றும் தர்ஷியின் மனைவி லக்ஷ்மி என இரு பெண்களின் வாழ்வில் இடியாக இறங்குகிறது. இவர்களுக்கு இடையிலான  உறவுகளை வெளிப்படுத்தும்படி அடுத்தடுத்து உடையும் ரகசியங்கள் திடுக்கிட வைக்கின்றன. 
 
காதல், துரோகம் மற்றும் விதியின் அதிர்ச்சியூட்டும் திருப்பங்களின் வழியே இந்தக்கதை பயணிக்கிறது. கிராமத்தின் சர்பஞ்ச், சிவயா, இந்த சிக்கலான நாடகத்தில் முக்கிய நபராக மாறுகிறார், அவரது நடவடிக்கைகள் வாழ்க்கையை மொத்தமாக மாற்றிப்போடும்படி  அமைக்கிறது.
 
புஷ்பாவும் லக்ஷ்மியும் வாழ்வில் மிக மோசமானதைச் சகித்துக் கொண்டதாக நினைக்கும் போது, அவர்கள் மிகவும் திகைப்பூட்டும் மேலும் ஒரு உண்மையை எதிர்கொள்கிறார்கள், அது அவர்களுக்குத் தெரிந்த அனைத்தையும் கேள்வி கேட்கும்படி அவர்களைத் தூண்டுகிறது. ஆனால் பெண்களின் தேர்வுகள் மட்டுப்படுத்தப்பட்ட உலகில், சமூக விதிமுறைகளை மீறி, தங்கள் சொந்த விதிகளை உருவாக்குவதற்கான வலிமையை அவர்களால் கண்டுபிடிக்க முடியுமா? என்பது தான்  இந்த சீரிஸ் கதை.
 
இந்த சீரீஸ் ZEE5 ஒரிஜினல் தெலுங்குத் சீரிஸான ​​‘பஹிஷ்கரனா’ சீரிஸ் ஜூலை 19 அன்று ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐஸ்வர்யா லஷ்மியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கேரளா புடவையில் அம்சமான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

சண்முக பாண்டியன் நடிக்கும் படை தலைவன் டிரைலரில் விஜயகாந்த்.. ரமணா ரெஃபரன்ஸ்..!

என் மனைவிக்கு இறந்ததற்கு அல்லு அர்ஜுன் காரணம் இல்லை… இறந்த பெண்ணின் கனவர் கருத்து!

இறந்தவர் குடும்பத்துக்கு எல்லாவகையிலும் துணையாக இருப்பேன்… ஜாமீனில் வெளிவந்த பின் அல்லு அர்ஜுன் பேட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments