சூர்யாவின் ‘அஞ்சான்’ ரி ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

vinoth
புதன், 15 அக்டோபர் 2025 (08:19 IST)
சூர்யா, சமந்தா, வித்யுத் ஜமால் உள்ளிட்டவர்கள் நடிப்பில் லிங்குசாமி இயக்க சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய யுவன் இசையமைக்க என கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் கூட்டணியுடன் உருவாகி 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸானது அஞ்சான் திரைப்படம். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவான திரைப்படம் படுதோல்வி அடைந்தது. திரைக்கதை என்ற வஸ்து இல்லாமல் எடுக்கப்பட்ட அஞ்சானை இணையத்திலும், பத்திரிகைகளிலும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் படத்தின் இயக்குனர் லிங்குசாமி கொடுத்த பில்டப்புகளை நம்பி சென்றவர்கள் ஏமாந்ததால் அவரைப் பற்றி மீம்ஸ்களாகப் போட்டு கிழித்தெறிந்தனர். அந்த படத்தில் சறுக்கிய லிங்குசாமி இன்னமும் தலைதூக்கவில்லை. அந்த அளவுக்கு தமிழ் சினிமா கண்டிராத அளவுக்கு அந்த படத்தின் மீதும், இயக்குனர் லிங்குசாமியின் மீதும் ட்ரோல்கள் எழுந்தன.

ஆனால் இந்த படத்தை இந்தியில் மறு படத்தொகுப்பு செய்து யுடியூபில் வெளியிட அது சுமார் 2 கோடி பார்வைகளைப் பெற்றது. இந்நிலையில் இப்போது 10 ஆண்டுகள் கழித்து ‘அஞ்சான்’ மீண்டும் படத்தொகுப்பு செய்யப்பட்டு ரி ரிலீஸாகிறது. கடந்த சில மாதங்களாகவே இந்த தகவல் பரவி வந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். நவம்பர் 28 ஆம் தேதி இந்த படம் ரி ரிலீஸாக வுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லவ் கண்டெண்ட்லாம் ஓரம் போச்சு! ட்ரெண்டாகும் வாட்டர்மெலன் திவாகர் Vs வினோத்! Biggboss Season 9 Tamil

ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

பிங்க் நிற உடையில் அசத்தல் லுக்கில் கவரும் ஸ்ரேயா!

காதலுக்காக 15 ஆண்டுகள் காத்திருந்தோம்… கணவர் பற்றி மணம் திறந்த கீர்த்தி!

தீபாவளி ரிலீஸூக்கு என்ன தகுதி இருக்கிறது எனக் கேட்டார்கள்… டீசல் படம் குறித்து ஹரிஷ் கல்யாண் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments